புதன், 6 ஜனவரி, 2010
சனி, 12 டிசம்பர், 2009
கவிதா ஒரு தனி மரம்
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
மடியிலே குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. கவிதாவுக்கு தூக்கம் வரவில்லை. அவள் தூங்கி பல மாதங்களாகி விட்டது. எங்கேயோ சர்ச் வாசலில் எழுதியிருந்த வாசகம் நினைவுக்கு வந்தது."மனிதன் உலகையே தனதாக்கிக் கொண்டாலும், அவன் ஆன்மாவை இழப்பதால் கிடைக்கும் பயன் என்ன?'வாசகத்துடன் கடந்து வந்த வாழ்க்கையும் நினைவில் சுழன்றது.
கவிதாவின் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலைக்குப் போனால்தான் வீட்டிலே அடுப்பு எரியும். அது வறுமை சுழற்றி அடித்த காலம். கவிதாவுக்கு தெளிவாய்ப் புரிந்தது, படிப்பை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை என்று.வெறியோடு படித்தாள்; வெற்றியும் பெற்றாள். அரசுத் தேர்வு எழுதிய கவிதாவுக்கு அரசுத்துறையில் இளநிலை உதவியாளர் வேலை கிடைத்தது. உழைப்பு, பணியில் காட்டிய நேர்மை என அவளுக்கு சீக்கிரமே துறையில் நல்ல பெயரும், பதவி உயர்வும் கிடைத்தது.
அதே அலுவலகத்தில்தான் வேலை பார்த்தான் முருகன். அவளது திறமையை அருகிலிருந்தே ரசித்த அவன், அவளது முயற்சிகளுக்கும் உதவிகள் செய்தான். பொது மக்களுக்கு நேரடி சேவை செய்ய வேண்டிய அலுவலகம் என்பதால், அங்கே வேலைக்கும், டென்ஷனுக்கும் குறைவே இருக்காது.ஆனால், முருகனும், கவிதாவும் இருந்தால் வேலை சுலபமாய் முடியும். மக்கள் சந்தோஷமாய்த் திரும்புவார்கள். ஒரே மனநிலையில், ஒரே இடத்தில் வேலை பார்த்த இருவருக்கும் இடையே காதல் உருவாக, அதிக நாட்கள் தேவைப்படவில்லை; இரு வீட்டிலும் எதிர்ப்பும் இல்லை.திருமணம் முடிந்தது; சந்தோஷமாய்ப் போனது வாழ்க்கை. அடுத்த ஆண்டிலேயே ஆண் குழந்தையும் பிறக்க, கவிதா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அலுவலகப் பணியில் உயர அடுத்தடுத்து நிறைய தேர்வுகளை எழுதினாள்.
அவளைப் படிக்கச் சொல்லி விட்டு, வீட்டு வேலையையும், ஆபீஸ் வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான் முருகன். நினைத்தது போலவே ஜெயித்தாள் கவிதா. அவள் எழுதிய தேர்வில், வேறு ஒரு துறையில் அதிகாரமுள்ள பதவி கிடைத்தது. எக்கச்சக்க சம்பளம், ஏகப்பட்ட அதிகாரம். தனி வாகனம், தனி பங்களா என வாழ்க்கை முறையே மாறியது. எல்லாம் வந்தபோது, கூடவே ஆணவமும் வந்து சேர்ந்தது. முருகனை எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தாள். வீட்டு வேலை எதையும் செய்வதில்லை என்பதில் திட்டவட்டமாய் இருந்தாள்.
காபி போட்டுக் கொடுப்பதிலிருந்து சமையல் வரை முருகனின் தலையில் போட்டு விட்டு, தினமும் "லேட்டாக' வர ஆரம்பித்தாள். முடிந்தவரை சமைத்து, இல்லாவிட்டால் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொடுத்து, குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி...முழு நேர வேலைக்காரன் ஆனான் முருகன்.இத்தனை செய்தபின்னும், துளியும் மரியாதை இல்லாமல் அவள் பேசியதில் துடித்துப் போனான். குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போனான். அடிக்கடி வெளியூர் சென்று நாள் கணக்கில் கவிதா தங்க ஆரம்பித்ததும், ஊரே ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தது.
கவிதாவின் அலுவலகத்தில் விசாரித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளுக்கும், காண்டிராக்டர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு என்று. அடிக்கடி "கேம்ப்' என்ற பெயரில் ஊட்டி, கொடைக்கானல் சென்று அவனுடன் அவள் தங்குவதும் தெரிந்தது.இதைப் பற்றிக் கேட்ட முருகனை, இஷ்டத்துக்கு திட்டித் தீர்த்தாள் கவிதா. பொறுமையிழந்த முருகன், கவிதாவின் உயரதிகாரியிடம் புகார் செய்தான். அதிகாரியின் முன்னிலையில் விசாரணை நடந்தது. இனிமேல் கணவனுடன் இணக்கமாக வாழ்வதாக கூறிச்சென்றவள், மீண்டும் சண்டை போட்டாள்.
ஒரு நாள் தகராறு முற்றி, குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவள், அடுத்த நாளே தனி வீட்டில் குடியேறினாள். விவாகரத்து கேட்டு, வழக்கும் தொடுத்தாள். குழந்தைக்காக விவாகரத்து தர மறுத்தான் முருகன்.வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக போலீசில் பொய்ப்புகார் கொடுத்தாள். அவளுடைய அதிகாரம் அங்கே வேலையைக் காட்டியது. போலீசார் தினமும் முருகனை ஸ்டேஷனுக்கு அழைத்து, "ஒழுங்கா விவாகரத்து கொடுத்துட்டு போ' என்று மிரட்டினர்.முருகன் மறுத்து வந்தான். அடுத்த முயற்சியாக, தனது செல்வாக்கைப் பயன் படுத்தி முருகனை வெகு தூரத்தக்கு மாற்றல் செய்தாள். குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்த முருகன், கடைசியில் வெறுத்துப் போய் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தான்.
குழந்தையோடு தனியாக வீட்டில் வசித்த கவிதா, அந்த காண்டிராக்டருக்கு "சின்ன வீடு' போலவே மாறிப்போனாள். வாரத்தில் 5 நாட்கள் கவிதாவோடு இருப்பது அந்த காண்டிராக்டரின் மனைவிக்கு தெரிந்தது. காண்டிராக்டரின் மாமனார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்.அவரின் காதுக்கு விஷயம் எட்டியவுடன், ஆயிரம் "வோல்டேஜ் கரண்ட்' அப்படியே கவிதா மீது பாய்ந்தது. அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டத்தில் அதிகாரம் இல்லாத "டம்மி போஸ்டிங்' க்கு தூக்கி அடிக்கப்பட்டாள் கவிதா.
யார் யாரையோ பிடித்தும் காரியம் கைகூடவில்லை. வேறு வழியே இல்லாமல் மாற்றல் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றாள் கவிதா. மாமனார் மிரட்டிய மிரட்டலில் நடுநடுங்கிப் போன காண்டிராக்டர், இப்போதெல்லாம் கவிதா போன் செய்தாலும் எடுப்பதில்லை. நேரடியாகப் பார்க்கப்போன போதும், அவளைப் பார்க்கவே இல்லை. ஒட்டு மொத்தமாய் உடைந்து போனாள் கவிதா. அப்போதுதான் முருகனின் காதல் மனது, அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்காக இல்லாவிட்டாலும், தனது குழந்தைக்காக தன்னை ஏற்றுக் கொள்வான் என்று அவனைத் தேடிப் போனாள்.
கஷ்டப்பட்டு, அவனது விலாசத்தைத் தேடி வீட்டுக்குப் போன போது, அங்கே முருகனுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். கஷ்டப்படும் ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, புது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தான் முருகன். இப்போது கவிதா ஒரு தனி மரம்.

சனி, 5 டிசம்பர், 2009
கமல்ஹாசன் வெளியிட்ட உயிர், உறவு, உண்மை
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அலைகள் மீடியா, பீப்பிள் எய்ட்ஸ் இனிஷியேட்டிவ், ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகியவை இணைந்து 3 எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்துள்ளன. உயிர், உறவு, உண்மை ஆகிய பெயர்களில் உருவான இந்த குறும்படங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு குறும்படங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், நடிகர்கள் நரேன், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உயிர் குறும்படத்தை கிருத்திகா உதயநிதியும், உறவு குறும்படத்தை சசிக்குமாரும், உண்மை குறும்படத்தை மிஷ்கினும் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_மதுக்கூர் தமிழரசன்

திங்கள், 30 நவம்பர், 2009
2012
என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!
>> 11/16/09
#fullpost{display:none;}
ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.
சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆனால் 2012க்குப் பிறகு? அது பற்றி எந்தக் குறிப்புகளும் மாயன் நாகரீக ஆதாரங்களில் இல்லையாம். ஆக 2012-ஐ பூமியின் எக்ஸ்பயரி டேட் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று இயக்குநர் யோசித்ததன் விளைவுதான் இந்த 2012 திரைப்படம் எனலாம் .உலகத்தின் முடிவு 2012 ம் ஆண்டு நிகழ்வதை சித்தரிப்பதே இந்த 2012 திரைப்படம். உலகின் அரசாங்கங்கள் அனைத்தும் தயாராகாத நிலையில் மாயன் கலெண்டர் முடிவடையும் 2012 பல இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக இடம் பெற்று உலகை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே படத்தின் கதை.
2010 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் புரட்டோகனிஸ்ட்டும் ஆன சட்னம் பூமியின் மைய வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பைக் கண்டு பிடிக்கிறார். படத்தின் கதாநாயகனாக வரும் விஞ்ஞானியும் சட்னத்தின் நெருங்கிய நண்பருமான அட்றியன் ஹெல்ம்ஸ்லி இதை அமெரிக்காவின் அப்போதைய அதிபராக விளங்கும் தோமஸ் வில்சனின் கண்ணோட்டத்திற்கு இச்செய்தியைக் கொண்டு வருகின்றார்.இதன் பின்னர் கதை 2012ம் வருடத்திற்கு நகருகின்றது. 'யெல்லோவ்ஸ்டோன்' எனப்படும்
உலகின் மிக அபாயகரமான எரிமலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயன்களின் உலக அழிவுப் பிரகடனத்தை அறிவுப்புச் செய்யும் சார்லி ப்ரொஸ்ட்டை சந்திக்க செல்கிறார் அட்றியன். இதேநேரம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
மிகவும் மோசமான நில அதிர்வுகளால் பாதிக்கப்படும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் முழுவதும் பசுபிக் சமுத்திரத்தில் மூழ்கி விடுகின்றது. இச்சமயத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலுள்ள அட்றியனின் மக்கள் நகரம் அழியும் போது தப்பி செல்லும் காட்சி மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்த வல்லதாய் அமைந்துள்ளது.
உலகின் மற்ற பாகங்களான இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டு கடலோரப் பிரதேசங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டு விடுகிறது.இதேவேளை இத்தாலியின் வத்திக்கான் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு அழிந்து விடுவதுடன் பாப்பரசரும் இறந்து விடுகிறார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாசிங்டன் மிகப்பெரிய சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டால் என்ன நிகழும்? என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய நகரங்கள் அத்தனையும் இடிந்து தரைமட்டம் ஆவது போலவும், உலகிலேயே உயரமான இமயமலையையே சுனாமி விழுங்குவது போலவும்
யெல்லோஸ்டோன் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சியும் லாஸ் வெகாஸ் நகரம் அதனால் அழிவுறும் காட்சிகள் ரூ 1200 கோடி செலவில் அற்புதமான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திகிலுக்கு மத்தியில், பூமியில் தொடர்ச்சியாக ஏற்படும் இவ்வனர்த்தங்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சீனாவை நோக்கி பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் படத்தின் கதாநாயகன் அட்றியன் ஹெல்ம்ஸ்லி பயணித்து கப்பல்கள் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார் , ஒரு குடும்பம் விமானத்தில் தப்பி செல்கிறது. உலகம் அழிந்தபின், அவர்கள் நிலை என்ன? . என்பதே படத்தின் மீதிக்கதை.
மனித இனத்தின் முதல் கலாச்சாரமான மாயன் பூர்வீகக்குடிகள் மனிதர்களின் அழிவை முன்னமே எவ்வாறு கட்டியம் கூறியிருந்தார்கள் என்பதையும் இயற்கை அனர்த்தங்கள் மனித அழிவை எவ்வாறு நிர்ணயிக்கின்றன என்பதையும் சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸுடன் கண்ணுக்கு விருந்தாகப் படைக்கும் 2012 நிச்சயம் தவற விடக்கூடாத படங்களில் ஒன்று. உலக சினிமா சரித்திரம் பார்த்திராத கிராபிக்ஸ் அற்புதம் எனும் வகையில் உலகம் அழியும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். முன்னோட்டக் காட்சிகள் முடிந்த பின்னும் படம் குறித்த பிரமிப்பு நீங்காமலேயே பலரும் அரங்கை வி்ட்டு வெளியேறினர்.வேற்றுக்கிரக வாசிகள் பூமியைத் தாக்குவதை வெளிப்படுத்தும் 'இண்டிபெண்டென்ஸ் டே', மற்றும் உலக அழிவை சித்தரிக்கும் இன்னொரு படைப்பான 'டே ஆஃப்டர் டுமாரோவ்' ஆகிய பிரசித்தமான படங்களை தந்த டைரக்டர் ரோலண்ட் எம்மெரிச்சின் கைவண்ணத்தில் உருவான 2012 நவம்பர் 13ம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. அசத்தலான கம்யூட்டர் கிராஃபிக்ஸுடன் தயாராகியுள்ள என்ட் ஆப் வேர்ல்ட் 2012 என்ற இந்த ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் 65 மில்லியன் டாலரும் உலகளவில் 225 மில்லியன் டாலரும் வசூலாகி சாதனை படைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது
செவ்வாய், 24 நவம்பர், 2009
உள்ளத்தை அள்ளித்தா ...................
உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கனடாவை சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டதும், அந்நிறுவனம் சார்பில் அவருக்கு ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் பரிசளித்ததும் நினைவிருக்கலாம். மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதர் பணிக்காக ரம்பா தனது அண்ணனுடன் கனடா சென்றார். அங்கு மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனின் வீட்டுக்கு சென்ற ரம்பா... குடும்ப உறுப்பினர் போல பழகியிருக்கிறார். இது இந்திரனின் பெற்றோருக்கு பிடித்து விட்டது. 37 வயதாகும் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், அதனை ரம்பாவிடமும், அவரது அண்ணனிடமும் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரம்பாவின் அப்பா, அம்மா மற்றும் அண்ணி கனடா புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். அங்கு கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிகிறது.ரம்பா தற்பாது கனடாவில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. ஆனால் நமது நிருபர் இ-மெயில் மூலம் ரம்பாவிடம் கேட்டதற்கு, கல்யாண பேச்சு நடப்பது உண்மைதான். ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய்கு மேல் வர்த்தகம் புரியும் இளம் தொழிலதிபரான இந்திரன் வீட்டில் என்னை பெண் கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தில் எல்லோருக்குமே இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. கல்யாணம் உறுதியானதும் அனைத்து பத்திரிகைகளுக்கும் முறைப்படி தகவல் தெரிவிப்பேன். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார்.
வெள்ளி, 13 நவம்பர், 2009
சில்லி சிக்கன் தோசை
தேவையான பொருட்கள்
Image
சிக்கன் - 3துண்டு
இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி
சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு
தயிர்- 1 தேக்கரண்டி
எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு Image
தோசை மாவு- 2 கப்
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 3
கொத்தமல்லி தழை-2 கொத்து
எண்ணை தேவைக்கேற்ப்ப
வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்
அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்
Image
ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
அதனை பொடியாக நறுக்கிவைக்கவும்
Image
,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்
Image
உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்
Image
.
அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்Image
நன்கு அமுக்கி விடவும்Image
தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்
Image
தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும் Image
சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)