திங்கள், 30 நவம்பர், 2009

2012




என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!
>> 11/16/09
#fullpost{display:none;}
ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.
சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆனால் 2012க்குப் பிறகு? அது பற்றி எந்தக் குறிப்புகளும் மாயன் நாகரீக ஆதாரங்களில் இல்லையாம். ஆக 2012-ஐ பூமியின் எக்ஸ்பயரி டேட் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று இயக்குநர் யோசித்ததன் விளைவுதான் இந்த 2012 திரைப்படம் எனலாம் .உலகத்தின் முடிவு 2012 ம் ஆண்டு நிகழ்வதை சித்தரிப்பதே இந்த 2012 திரைப்படம். உலகின் அரசாங்கங்கள் அனைத்தும் தயாராகாத நிலையில் மாயன் கலெண்டர் முடிவடையும் 2012 பல இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக இடம் பெற்று உலகை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே படத்தின் கதை.
2010 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் புரட்டோகனிஸ்ட்டும் ஆன சட்னம் பூமியின் மைய வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பைக் கண்டு பிடிக்கிறார். படத்தின் கதாநாயகனாக வரும் விஞ்ஞானியும் சட்னத்தின் நெருங்கிய நண்பருமான அட்றியன் ஹெல்ம்ஸ்லி இதை அமெரிக்காவின் அப்போதைய அதிபராக விளங்கும் தோமஸ் வில்சனின் கண்ணோட்டத்திற்கு இச்செய்தியைக் கொண்டு வருகின்றார்.இதன் பின்னர் கதை 2012ம் வருடத்திற்கு நகருகின்றது. 'யெல்லோவ்ஸ்டோன்' எனப்படும்
உலகின் மிக அபாயகரமான எரிமலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயன்களின் உலக அழிவுப் பிரகடனத்தை அறிவுப்புச் செய்யும் சார்லி ப்ரொஸ்ட்டை சந்திக்க செல்கிறார் அட்றியன். இதேநேரம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
மிகவும் மோசமான நில அதிர்வுகளால் பாதிக்கப்படும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் முழுவதும் பசுபிக் சமுத்திரத்தில் மூழ்கி விடுகின்றது. இச்சமயத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலுள்ள அட்றியனின் மக்கள் நகரம் அழியும் போது தப்பி செல்லும் காட்சி மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்த வல்லதாய் அமைந்துள்ளது.
உலகின் மற்ற பாகங்களான இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டு கடலோரப் பிரதேசங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டு விடுகிறது.இதேவேளை இத்தாலியின் வத்திக்கான் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு அழிந்து விடுவதுடன் பாப்பரசரும் இறந்து விடுகிறார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாசிங்டன் மிகப்பெரிய சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டால் என்ன நிகழும்? என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய நகரங்கள் அத்தனையும் இடிந்து தரைமட்டம் ஆவது போலவும், உலகிலேயே உயரமான இமயமலையையே சுனாமி விழுங்குவது போலவும்
யெல்லோஸ்டோன் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சியும் லாஸ் வெகாஸ் நகரம் அதனால் அழிவுறும் காட்சிகள் ரூ 1200 கோடி செலவில் அற்புதமான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திகிலுக்கு மத்தியில், பூமியில் தொடர்ச்சியாக ஏற்படும் இவ்வனர்த்தங்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சீனாவை நோக்கி பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் படத்தின் கதாநாயகன் அட்றியன் ஹெல்ம்ஸ்லி பயணித்து கப்பல்கள் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார் , ஒரு குடும்பம் விமானத்தில் தப்பி செல்கிறது. உலகம் அழிந்தபின், அவர்கள் நிலை என்ன? . என்பதே படத்தின் மீதிக்கதை.
மனித இனத்தின் முதல் கலாச்சாரமான மாயன் பூர்வீகக்குடிகள் மனிதர்களின் அழிவை முன்னமே எவ்வாறு கட்டியம் கூறியிருந்தார்கள் என்பதையும் இயற்கை அனர்த்தங்கள் மனித அழிவை எவ்வாறு நிர்ணயிக்கின்றன என்பதையும் சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸுடன் கண்ணுக்கு விருந்தாகப் படைக்கும் 2012 நிச்சயம் தவற விடக்கூடாத படங்களில் ஒன்று. உலக சினிமா சரித்திரம் பார்த்திராத கிராபிக்ஸ் அற்புதம் எனும் வகையில் உலகம் அழியும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். முன்னோட்டக் காட்சிகள் முடிந்த பின்னும் படம் குறித்த பிரமிப்பு நீங்காமலேயே பலரும் அரங்கை வி்ட்டு வெளியேறினர்.வேற்றுக்கிரக வாசிகள் பூமியைத் தாக்குவதை வெளிப்படுத்தும் 'இண்டிபெண்டென்ஸ் டே', மற்றும் உலக அழிவை சித்தரிக்கும் இன்னொரு படைப்பான 'டே ஆஃப்டர் டுமாரோவ்' ஆகிய பிரசித்தமான படங்களை தந்த டைரக்டர் ரோலண்ட் எம்மெரிச்சின் கைவண்ணத்தில் உருவான 2012 நவம்பர் 13ம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. அசத்தலான கம்யூட்டர் கிராஃபிக்ஸுடன் தயாராகியுள்ள என்ட் ஆப் வேர்ல்ட் 2012 என்ற இந்த ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் 65 மில்லியன் டாலரும் உலகளவில் 225 மில்லியன் டாலரும் வசூலாகி சாதனை படைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக