வெள்ளி, 13 நவம்பர், 2009

ELLAME SIRIPPUTHAN (2)

பேருந்து நகைச்சுவைகள்....




ஒரு கூட்டமான பேருந்தில் ராமு கஷ்டப்பட்டு ஏற முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் கூட்டம் அவனை உள்ளே விட வில்லை.

ராமு சத்தமாக கத்தினான் "என்னை ஏற விடுங்கள்"

கூட்டத்தில் ஒருவர்: "பேருந்தில் இடம் இல்லை, ஏற முடியாது, அடுத்த பஸ்சில் வா"

ராமு: "இல்லை நான் இந்த பஸ்சில் தான் வந்தாக வேண்டும், நீங்கள் என்னை ஏற்றித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் இந்த பஸ் ஒரு அடி கூட நகராது"

கூட்டத்தில் ஒருவர்: " நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா"

ராமு: "இல்லை நான்தான் இந்த பஸ்ஸின் டிரைவர்"



*******



> ஒரு ரூபாயை வைத்து ஒரு முட்டாளை எப்படி கொள்ள முடியும்.

>> அந்த ஒரு ரூபாயை பஸ் டயரின் முன்னால் வீசி...



******

கடலை கடந்த பஸ் எது?

கொலம்பஸ்

******



ஹோட்டல்ல காசு இல்லன்னா மாவு ஆட்ட சொல்லுவாங்க,

பஸ்ல காசு இல்லன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?



*****



பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும், ஆனா

புல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ண புல்(full) வருமா? கோட்டர் கூட வராது.



******

பஸ் ல நீங்க ஏறுனாலும், பஸ் உங்க மேல ஏறுனாலும்

டிக்கெட் வாங்குறது நீங்கதா.



*****



ஒரு விடுகதை:

தகர பெட்டிக்குள் மோகினி பிசாசுகள் அது என்ன?



லேடிஸ் காலேஜ் பஸ்..



*****



பஸ் ல கண்டக்டர் தூங்குனா யாருக்கும் டிக்கெட் கிடைக்காது,

டிரைவர் தூங்குனா எல்லாருக்குமே டிக்கெட் தான்..



*****



மகன்: அம்மா, இன்னைக்கு பஸ்ல அப்பா என்னை எந்திரிக்க சொல்லிட்டு ஒரு ஆண்ட்டிய உக்கார வச்சுட்டாரு..

அம்மா: அதனால என்னடா பரவாயில்லை..

மகன்: நான் உக்காந்துட்டு இருந்தது அவர் மடில.



*******



கண்டக்டர்: படில நிக்காதப்பா, உள்ளதா கடல் மாதிரி இடம் இருக்கே.. உள்ள வா.

மாணவன்: எனக்கு நீச்சல் தெரியாது, அதுதா கரைலேயே நிக்கற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக