வெள்ளி, 13 நவம்பர், 2009

ELLAME SIRIPPUTHAN

நகைச்சுவை - இரசித்தவை




==========================



ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்

எவ்வளவு?





கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.





ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி

கூட்டினாலும் வராதேடா?





கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்

சார்!!!





#######################################





தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட

கண்ணாடியக் காணோம்; கண்ணு

தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்

தேடி எடுத்துக் கொடுடா.





கோபால்: போ தாத்தா, எனக்கு

வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்

போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!





தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு

விழாவில்) : பள்ளிக்கு தினமும்

லேட்டா வந்தாலும், முன் சொன்ன

காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்

தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்

சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த

சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.





!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####











இதோ இன்னொரு லேட்டா வர்ற ஜோக்;



ஒரு அலுவலகத்துல இருந்த லேட் ரிஜிஸ்டரை பாத்துட்டிருந்த

மேலதிகாரி, லேட்டா வந்த எல்லாரையும் அழைத்து

“எப்போ ட்ரீட் வைக்கப்போறீங்க?”ன்னு கேட்டாராம்.



எல்லாரும் எதுக்குன்னு தெரியாம முழிக்க, அந்த லேட்

ரிஜிஸ்டரைக் காட்டினாரு.



அதுல முதல் ஆள் `என் மனைவிக்கு அதிகாலை ஆண்மகன்

பிறந்தான். மருத்துவமனையிலிருந்து வர தாமதமாகிவிட்டது’ ன்னு

எழுதியிருந்தாரு.



லேட்டா வந்த எல்லாருமே அதுக்கு டிட்டோ போட்டிருந்தாங்களாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக